மெல்ல மெல்ல குறைந்து வரும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம்!! நம் பாட்டிமார்களின் உடல் ஆரோக்கியத்தின் சீக்ரெட் இதுதான் போல!!
வெற்றிலை பாக்கு என்றால் முதலில் நினைவிற்கு வருவது நம் பாட்டிமார்கள் தான்.வெற்றிலையில் கொட்டை பாக்கு,சுண்ணாம்பு தடவி மடித்து உண்ணும் அவர்களின் இந்த பழக்கத்தால் தான் பல நோய் பாதிப்புகளை குணமாக்கி கொண்டனர் என்பது இன்றைய தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
நம் பாட்டி காலத்தோடு வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் நின்றுவிட்டது.ஆனால் இவை ஒரு நல்ல பழக்கம் ஆகும்.
வெற்றிலையில் இருக்கின்ற காரம் கலந்த உரைப்பு கபத்தை நீக்கக் கூடியது.பாக்கில் இருக்கின்ற துவர்ப்பு பித்தத்தை போக்க கூடியது.சுண்ணாம்பில் இருக்கின்ற காரம் வாதத்தை போக்க கூடியது.இந்த போன்று பொருட்களையும் சேர்த்து மென்றால் வாயில் உள்ள கிருமிகள் அழிந்து விடும்.
தொடர்ந்து வெற்றிலை பாக்கு போடுவதால் பற்களில் கறை உண்டாகிவிடும் என்று அச்சப்படுபவர்கள் வெற்றிலை பாக்கு போட்டு சிறிது நேரம் கழித்து வாயை நன்கு கொப்பளித்துக் கொள்ளவும்.
வெற்றிலை பாக்கு போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும்.சுண்ணாம்பு கால்சியம் சத்து நிறைந்தவை.இதை வெற்றிலையுடன் சேர்த்து மெல்வதால் உடலில் எலும்புகளின் வலிமை பல மடங்கு அதிகரிக்கிறது.இதனால் எலும்பு முறிவு ஏற்படுவது தடுக்கப்படும்.உடலில் பித்தம்,வாதம்,கபம் ஏற்படாமல் இருக்க வாரத்தில் ஒருமுறையாவது வெற்றிலை பாக்கு போட வேண்டும்.
சளி,இருமல்,தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகளை வெற்றிலை பாக்கு போட்டு சரி செய்து கொள்ளலாம்.வெற்றிலை பாக்கு போடுவதால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும்.