‘இந்த இடத்துல சீன இப்படி மாத்துனா படம் அப்படி இருக்கும்’ என டைரக்டருக்கு அட்வைஸ் கொடுத்த தல!

H.வினோத் இயக்கத்தில் தல தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படம் முடிந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராகவும் இருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் தல, வினோத்துக்கு படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி ஃப்ரீ அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம். அந்த மாற்றங்களை கதையில்  பண்ணப் வதாக  தகவல்கள் வெளியான  ருசிகரதகவல் வெளியாகி வருகிறது.

விஸ்வாசம் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் தல-க்கு கைகொடுத்ததால் அதேபோன்று சென்டிமென்ட் காட்சிகளை வலிமை படத்திலும் வைக்குமாறு அஜித் டைரக்டருக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம். அவர் சொன்னபடியே கதையில் சில சிறு மாற்றங்கள் நடைபெற உள்ளதாம்.

தலய பல ஆங்கிள்ளில பார்த்த ரசிகர்களுக்கு, தல-க்கு புதுசா கதை எழுதுற ஆர்வமும் வந்துருச்சுன்னு  இந்த தகவலை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

 

Leave a Comment