3ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர்!! பெற்றோர்கள் அதிர்ச்சி!!

Photo of author

By Jeevitha

Tiruvallur: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு என்கின்ற ஊரில் ஒரு அரசு பள்ளியில் 3-ஆம் வகுப்பு மாணவிக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆஞ்சநேயர் நகரில் ஒரு அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் மொத்தமாக 16 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக செங்கல்வராயன் பணியாற்றி வருகிறார்.

இவர் அந்த பள்ளியில் படிக்கும் மூன்றாம் வகுப்பு மாணவியை கழிவறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் அந்த பள்ளிக்கு வெறும் 5 மாணவர்கள் மட்டும் சென்று பயின்று வருகின்றனர்.

அந்த மாணவி இதுகுறித்து அவர்கள் பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அவர்கள் பள்ளிக்கு சென்று தலைமையாசிரியர் செங்கல்வராயனிடம் இந்த செய்தி பற்றி கேட்டதற்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. அந்த நிலையில் அந்த 3-ஆம் வகுப்பு மாணவி பேசிய வீடியோ வெளியான நிலையில், அந்த மாணவிக்கு நேர்ந்தது பற்றி கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் இந்த பாதிக்கப்பட்ட மாணவி இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் எங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.