Breaking News, District News, News, State

மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது!! ஸ்ரீவில்லிபுத்தூரில் பரபரப்பு!!

Photo of author

By Vinoth

ராஜபாளையம்: PSK பார்க் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கடந்த சில வருடங்களாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. கடந்த இதற்க்கு முன்பு வரை கிருஷ்ணகிரி அட்டப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலும் கடந்த வருடம் ஜூலை மாதம் பணியிட மாறுதல் பெற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிக்கு சேர்ந்தார்.

அதனை அடுத்து  கிறிஸ்துமஸ் பண்டிகையை மாணவர்களுக்கு கேக் கொடுத்துள்ளார். மேலும் அவர் அருகில் இருந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் கேக் கொடுத்துள்ளார். அதன் பின்பு அரையாண்டு தேர்வு  விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில் கடந்த 2-ம் தேதி தலைமை ஆசிரியர் ராஜேஷுக்கு மாணவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அப்போது அங்கு வந்த 2  பிளஸ் ஒன் மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் ராஜேஷ் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.  மேலும் இது தொடர்பாக மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.

இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கும் தகவல் அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தொடக்கப்பள்ளி தலைமை  ஆசிரியர் ராஜேஷ் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக இந்த 2 மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ராஜேஷை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது. மேலும் தலைமை ஆசிரியர் ராஜேஷ் அவர்களை ஜனவரி 21-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

விராட் செய்தது எரிச்சலை ஏற்படுத்தியது.. உன்னால் அணிக்கு தான் நெருக்கடி!! கடுமையாக தாக்கிய கவாஸ்கர்??

சீனாவுக்கு ஆப்பு ரெடி.. இந்தியாவுடன்  இணைந்த புதிய நாடு!! பொருளாதாரம் உச்சம் அடையும்!!