நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

Photo of author

By Divya

நம்மை அசர வைக்கும் அரச மரம் எனும் மூலிகை!! இலை முதல் வேர் வரை என்னென்ன நோய்க்கு மருந்து?

Divya

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து அரச மரம் ஒரு வழிபாடு மரமாக பார்க்கப்படுகிறது.ஆனால் இந்த அரச மரம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கிறது.அரச இலை முதல் அரச மர வேர் வரை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.

அரச மர இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் போல் செய்து குடித்தால் உடலில் பித்தம்,வாதம்,கபம் ஆகிய மூன்றும் சமநிலைக்கு வரும்.அரசமர பட்டையை பொடித்து பாலில் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

அரச மர பட்டையை பொடித்து தேன் குழைத்து சருமத்தில் பூசினால் சொறி,சிரங்கு பாதிப்பு குணமாகும்.சருமம் பளபளப்பாக மாற அரச மர பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.அரச மரத்தில் இருந்து வடியும் பாலை சேற்றுப்புண்கள் மீது பூசினால் சீக்கிரம் குணமாகும்.

அரசமர கொழுந்தை பொடித்து பாலில் கலந்து குடித்தால் செரிமான மண்டல ஆரோக்கியம் மேம்படும்.வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாக அரசமர வேரை பொடித்து தேன் கலந்து சாப்பிடலாம்.

மாதவிலக்கு பிரச்சனை இருக்கும் பெண்கள் அரச மரத்தின் வேர் மற்றும் விதையை பொடித்து தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.வெள்ளைப்படுதல் பிரச்சனை இருக்கும் பெண்கள் அரசமர பட்டையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்.அரசமர பட்டை ஊறவைத்த நீரை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.

அரச மர பட்டை பொடியை உடலில் பூசினால் வெட்டை குணமாகும்.காயங்கள் மீது அரச மர இலையை வைத்து கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

அரசமர விதையை பொடியாக்கி தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.அரசமர கொழுந்தை வெறும் வாயில் மென்று சாப்பிட்டால் பல் ஆரோக்கியம் மேம்படும்.அரச மர வேரை கொண்டு பல் துலக்கினால் பல் வலிமை அதிகரிக்கும்.