நடிகர் அஜித்குமார் சினிமா துறையில் நுழைந்த வளர்ந்து கொண்டிருந்த தருணத்தில் அவருக்கும் நடிகை ஹீரா என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்திருக்கிறது. ஆனால் இவர்களுக்குள் திருமணம் நடைபெறவில்லை. சமீபத்தில் நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அவருடைய ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்ட நேரத்தில் நடிகை ஹீராவின் பதிவு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஹீரா X தள பதிவு :-
இந்த பதிவானது ஜனவரி மாதம் எழுதப்பட்ட இருப்பினும் நடிகர் அஜித் அவர்கள் பத்மபூஷன் விருது பெற்றிருக்கக் கூடிய சமயத்தில் பெரிதும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த பதிவில் நான் ஒரு நடிகருடன் நெருங்கிய உறவில் நீண்ட காலம் இருந்தேன் என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் கடைசியில் அவர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் என்றும் தெரிவித்து இருக்கிறார்.
தன்னை ஒரு ஸ்டூடியோவுக்கு வர சொல்லி அவர் நேரில் வராமல் மற்றொருவரை வைத்து இந்த விஷயத்தை தன்னிடம் கூறியதாகவும் தான் எவ்வளவு கெஞ்சி கதறி அழுத பொழுதிலும் தன்னை ஏற்றுக்கொள்ளாமல் ஒரு வேலைகாரி மாதிரி இருக்கக்கூடிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் அப்பொழுதுதான் அவளை யாரும் பார்க்க மாட்டார்கள் என்றும் நான் விருப்பப்பட்ட மாதிரி என்னுடைய வாழ்வை வாழ முடியும் என்றும் அவர்கள் தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.
இது மட்டுமல்லாது, நான் போதைப் பொருளுக்கு அடிமையானதாக பொய்யான தகவலை பரப்பியதோடு மக்கள் முன்னிலையில் என்னுடைய பெயரை கெடுத்து விட்டனர். அவர்களுக்கு சிம்பதி கிரியேட் ஆக வேண்டும் என்பதற்காக எனக்கு ஆப்ரேஷன் நடந்திருக்கிறது என்றெல்லாம் மக்களிடையில் பொய் சொல்லி இருப்பது தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர்களுடைய கஷ்ட காலத்தில் இரவு பகல் பார்க்காமல் அவர்களோடு இருந்த தருணத்தில் என்னை இவ்வாறு திடீரென தூக்கி போட்டு விட்டார்கள் என மனமடைந்து பேசி இருந்தால் ஹீரா.