கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

0
58

தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் அயராத உழைப்பினாலும் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். மேலும் இவர் பாடல் ஆடல் போன்ற அனைத்திலும் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். 

தற்போது இவர் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை மாரிசெல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் தனது படங்களில் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை பற்றி ரொம்ப ஜாலியா மக்களுக்கு எடுத்துச் சொல்வார்.அந்த விதத்தில் அவரை ஒரு வித்தைக்காரர் என்றே சொல்லலாம். ஏற்றத்தாழ்வு நிறைந்த கதை கதைகளின் கலத்தை மக்கள் நடுவே கொண்டு சேர்க்கும் திறமை படைத்தவர் இவர்.

இவரின் இயக்கத்தில் வெளியேறிய ‘பரியேறும் பெருமாள்’ என்னும் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் அவர் கண்ட வெற்றியின் காரணமாக தற்போது தனுஷுடன் படத்தில் இணைய வாய்ப்பு கிடைத்தது. இந்தப்படத்திலும் கொடியின் குளத்தில் 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தை மக்களுக்கு எடுத்துக் கூற உள்ளார் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில்தான் கர்ணன் படத்தின் ஒரு சில பாடல்களும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்தப் படத்தின் கதாநாயகி ரஷிஜா விஜயன்  சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் நடித்த காட்சியை அவர் படக்குழுவினருடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளார்.மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவிற்கு இந்த படத்தின் மூலம்தான் என்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  இந்த போட்டோவை வெளியிட்டுதனுஷ் ரசிகர்களின் மனதில் இடத்தையும் பிடித்து விட்டார்.

author avatar
Parthipan K