வெள்ளரிக்காயில் மறைந்திருக்கும் ஆபத்து!! இந்த நேரத்தில் மட்டும் இதை சாப்பிடாதீங்க!!

Photo of author

By Divya

வெள்ளரிக்காயில் மறைந்திருக்கும் ஆபத்து!! இந்த நேரத்தில் மட்டும் இதை சாப்பிடாதீங்க!!

Divya

உடல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த வெள்ளரிக்காய் சாப்பிட வேண்டும்.இதில் வைட்டமின்கள்,தாதுக்கள்,நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது.வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது குறையும்.

வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் சூடு தணியும்.வெள்ளரிக்காய் சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ள உதவும்.அதிக நன்மைகள் கொண்டிருக்கும் வெள்ளரிக்காயை எல்லா நேரங்களிலும் சாப்பிட முடியாது.குறிப்பாக இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் காயின் ஆரோக்கிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடும்.

இரவில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் என்னாகும்?

தூங்கச் செல்வதற்கு முன்னர் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.இரவில் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் மலச்சிக்கல்,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும்.இரவு நேரத்தில் வெள்ளரிக்காய் சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும்.

வெள்ளரிக்காய் நீர்ச்சத்து நிறைந்தவை என்பதால் இவற்றை இரவு நேரத்தில் சாப்பிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

வெள்ளரிக்காயில் அதிக பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது.இந்த வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

அதிகளவு வெள்ளரிக்காய் சாப்பிட்டால் இதயம் சம்மந்தபட்ட பிரச்சனை ஏற்படும்.ஒவ்வாமை இருப்பவர்கள் வெள்ளரிக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.அதிக வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் இரத்த நாளங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

வெள்ளரியை அதிகமாக சாப்பிட்டால் சிறுநீர் பெருகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படும்.இதனால் உடலில் நீரிழப்பு பிரச்சனை ஏற்படும்.எனவே காலை மற்றும் மதிய நேரத்தில் சிறிதளவு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.