நம்முடைய முன்னோர்கள் காலத்தில் இருந்தே ஆடாதோடை இலை என்ற அபூர்வ மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது.கசப்பு சுவை நிறைந்த ஆடாதோடை இலை சளி,இருமலை குணப்படுத்தும் அருமருந்தாக திகழ்கிறது.இந்த ஆடாதோடை இலைக்கு ஆயுள் காக்கும் மூலிகை என்ற பெயரும் இருக்கிறது.
இந்த ஆடாதோடை இலையை ஆடுகள் தீண்டாது என்பதால் இதை ஆடு தீண்டா பாலை என்று அழைக்கின்றோம்.இந்த ஆடாதோடை இலை சித்த மருத்துவத்தில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.சுவாசம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை சரி செய்யும் அருமருந்தாக ஆடாதோடை இலை திகழ்கிறது.
ஆடாதோடை இலையின் மருத்துவ பயன்கள்:
1.இரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிடலாம்.
2.ஆஸ்துமா,சைனஸ் போன்ற பாதிப்புகளில் இருந்து மீள ஆடாதோடை இலை சாறை பருகலாம்.சளி பாதிப்பு இருப்பவர்கள் ஆடாதோடை இலையில் கசாயம் செய்து குடித்தால் பலன் கிடைக்கும்.
3.காய்ச்சல் குணமாக ஆடாதோடை இலையின் சாறை பருகலாம்.குடைச்சல்,நரம்பு இழுப்பு பிரச்சனை இருப்பவர்கள் ஆடாதோடை இலையை அரைத்து சாறு எடுத்து பருகலாம்.
4.ஆடாதோடை இலையை உலர்த்தி பொடித்து பாலில் கலந்து குடித்தால் வாந்தி,குமட்டல் பாதிப்பு குணமாகும்.
5.தினமும் ஒரு ஆடாதோடை இலையை ஆவியில் வேகவைத்து சாறு எடுத்து பருகினால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
6.ஆடாதோடை இலையுடன் வேப்ப இலையை அரைத்து சாறு எடுத்து சாப்பிட்டு வந்தால் சைனஸ் பாதிப்பு குணமாகும்.
7.ஆடாதோடை இலையுடன் குப்பைமேனி இலையை அரைத்து காயம் பட்ட இடங்களில் பூசினால் வலி தானாக குறையும்.