உயர்ந்தது கிரைய பத்திரத்தின் விலை! பல மடங்கு உயர்வா? அதிர்ச்சியில் பொதுமக்கள்!
பத்திரபதிவு பத்திரத்தில், பயன்படுத்தும் முத்திரையின் ஆரம்ப விலை 10 ரூபாய் மட்டும் தான். அதை 100 ரூபாயாக உயர்த்த வேண்டுமென சட்டசபையில் நேற்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
தற்போதுவரை பத்திரபதிவு அலுவலகங்களில் 10, 20, 50 ரூபாய் என முத்திரையிடப்பட்ட பத்திரங்ககள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன, அது 100, 200, 500 ஆக மாற்றப்படும். என கடந்த ஆண்டு நடந்த மானிய கோரிக்கை கூடத்தில் அமைச்சர் மூர்த்தி கூறியிருந்தார்.
இந்த அறிக்கையை செயல்படுத்தும் விதமாக, 1899ம் ஆண்டு முத்திரையின் சட்டங்களை திருத்தம் செய்வதற்கான மசோதாவை நேற்று மாலை அமைச்சர் மூர்த்தி மனுதாக்கல் செய்தார்.
இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக, மார்க்சிஸ்ட் கட்சி எம்.எல்.எ நாகை மாலி, குறைந்த விலையில் பயன் படுத்திக்கொண்டு வரும். பத்திரத்தின் மதிப்பு தற்போது பத்து மடங்கு வரை அதிகரிக்கலாம்.
உதாரணமாக 20-ரூபாய் ஆக இருக்கும் பத்திரத்தின் விலை 200 ரூபாயாக இருக்கும். 100 ரூபாயாக இருக்கும் முத்திரை தாள் இனி 1000 ரூபாயாக உயரும் என அக்கூட்டத்தில் பேசினார்.