செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!

Photo of author

By Sakthi

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!

Sakthi

Updated on:

செல்பி எடுக்கும் போது நிகழ்ந்த சம்பவம்! ரயில் மோதி உயிரிழந்த இளைஞர்கள்!!

 

ரயிலின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற பொழுது ரயில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.

 

இன்றைய காலத்தில் செல்பி மோகம் இளைஞர்கள் மத்தியில் தொற்று நோய் மாதிரி அதிகம் பரவி வருகின்றது. எங்கு சென்றாலும் ஒவ்வொருவரும் ஒரு மொபைல் போனை வைத்துக் கொண்டு செல்பி எடுக்கத் தொடங்கிவிடுகின்றனர். கோயிலில் சென்றால் அங்கும் செல்பி எடுப்பது, பேருந்தின் பயணத்தின் பொழுது செல்பி எடுப்பது, ரயில் பயணங்களில் செல்பி எடுப்பது, இறந்தவர்களின் உடன் செல்பி எடுப்பது போன்று பல இடங்களில் செல்பி மோகம் பரவியுள்ளது.

 

இதில் மிகப் பெரிய சோகம் இந்த செல்பி புகைப்படங்கள் எடுக்கும் பொழுது நடக்கும் உயிரிழப்புகள் தான். மலைகளில் சென்று செல்பி எடுக்கும் பொழுது அஜாக்கிரதை காரணமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றது. மேலும் மொட்டை மாடியில் செல்பி எடுக்கும்பொழுதும், இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுதும் செல்பி எடுக்கும் பொழுது விபத்து ஏற்படுகின்றது. இதைப் போல ஓடும் ரயிலின் அருகே சென்று செல்பி எடுக்க முயல்வது மிகப் பெரிய ஆபத்தான செயலாகும். அதனால் உயிரிழப்புகள் மற்றும் மிகப்பெரிய பின் விளைவுகள் மட்டும் தான் மிச்சம்.

 

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பிரபலம் அடைய வேண்டும் என்று நிறைய பேர் நிறைய விதமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் ரயில் தண்டவாளங்களில் நின்று அல்லது தண்டவாளத்தில் ரயில் வரும் பொழுது ரயிலின் அருகே சென்று செல்பி எடுக்க முயற்சிப்பது மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.

 

இது போல தமிழகத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. தமிழகத்தில் ஆனைப்பாளையம் அருகே பாண்டியன், விஜய் என்கிற இரண்டு இளைஞர்கள் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த அதிவிரைவு ரயில் அவர்கள் மீது மோதியுள்ளது. ரயில் அவர்கள் மீது மோதியதில் பாண்டியன் மற்றும் விஜய் இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் விஜய், பாண்டியன் அககய இளைஞர்களின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.