ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!

0
68

ஜிம்பாவே அணிக்கு எதிராக அபார வெற்றி! உலகக் கோப்பைக்குள் முதல் அணியாக நுழைந்த இலங்கை!!

 

ஜிம்பாவே அணிக்கு எதிர்ன தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று முதல் அணியாக உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

 

நேற்று(ஜூலை2) நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து. முதலில் பேட் செய்த ஜிம்பாவே அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

ஜிம்ப்வே அணியில் அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் அரைசதம் அடித்து 56 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணியில் பந்துவீச்சில் மஹீஸ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும், மதுஷங்கா 3 வக்கெட்டுகளையும், பதிரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

166 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் பதும் நிசன்கா மற்றும் டிம்ருத் கருணரத்னே சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

 

30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பதும் நிசன்கா ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய தொடக்க வீரர் டிம்ருத் கருணரத்னே சதம் அடித்தார். டிம்ருத் கருணரத்னே சதம் அடித்து 101 ரன்கள் சேர்க்க அவருடன் சேர்ந்து பொறுமையாக விளையாடி குசால் மென்டிஸ் 25 ரன்களை சேர்த்தார்.

 

இதனால் இலங்கை அணி நிர்ணயிக்கபபட்ட 166 ரன்கள் என்ற இலக்கை 33.1 ஓவரில் 169 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வீழ்ந்த ஒரு விக்கெட்டை ஜிம்பாவே அணியின் இங்கரவா கைப்பற்றினார்.

 

9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை அணி முதல் அணியாக உலகக் கோப்பை சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற்றது. இலங்கை அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஜிம்பாவே அணி 3 போட்டிகளில் வெற்றி பெற்று நேற்று(ஜூலை 2) நடைபெற்ற போட்டியில் தோல்வி அடைந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வி பொறுத்து ஜிம்பாவே அணியின் சூப்பர் 10 சுற்றுக்கான வாய்ப்பு அமையும்.

 

நேற்று(ஜூலை2) நடைபெற்ற மற்றொரு போட்டியில் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  நேபால் அணி வெற்றி பெற்றது.