மார்க் ஷீட் தராததால் கல்லூரி முதல்வரை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம்,இந்தூரை சேர்ந்தவர் விமுக்தா சர்மா (54). இவர் அங்குள்ள பிஎம் என்ற பார்மசி கல்லூரியில் முதல்வராக இருந்து வருகிறார்.சம்பவதன்று வழக்கம் போல அவர் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரின் காரை வழிமறித்த அசுதோஷ் ஸ்ரீவத்சவா (24) என்ற முன்னாள் மாணவர் கல்லூரி முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார்.ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர் வைத்திருந்த பெட்ரோலை விமுக்தா மீது ஊற்றி தீவைத்துள்ளார். உடல் முழுவதும் தீ மள மளவென பரவியதால் விமுக்தா அலறினார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கதினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 80 சதவீத தீக்காயங்களுடன் அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் தப்பியோடி தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த முன்னாள் மாணவனை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கடந்தாண்டு பள்ளி படிப்பை முடித்த அவருக்கு மார்க் ஷீட் வழங்குவது தொடர்பாக அவருக்கும் கல்லூரி நிர்வாகத்தினருக்கும் இடையே பிரச்சனை இருந்துள்ளது.
அவர் அரியர் பேப்பர்களை எழுதியும் அவருக்கு மார்க் ஷீட் வழங்காமல் இழுத்தடித்ததால் கல்லூரி பேராசிரியர் ஒருவரை தாக்கி சிறைக்கு சென்றுள்ளார். தற்போது ஜாமீனில் வெளிவந்த நிலையில், அவர் இந்த செயலை செய்திருப்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.