நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

Photo of author

By Divya

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

Divya

நரபலி சம்பவம்.. போலீஸீல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபனால் பரபரப்பு!!

நடிகர் பார்த்திபன் அவர்கள் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோ தற்பொழுது இணைய வாசிகளிடையே பகீரை கிளப்பி இருக்கிறது. அனைவரும் அதிர்ச்சி ஆகும் அளவிற்கு அவர் அப்படி என்ன வீடியோ தான் பதிவிட்டுள்ளார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழும்.

அவர் பதிவிட்டுள்ள அந்த வீடியோ நரபலி பூஜை செய்வது போன்று இருக்கிறது. இரண்டு மனிதர்களின் தலைகள் துண்டிக்கப்பட்டு வாழை இலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. அவர்களின் உடல் அதன் அருகில் வைக்கப்பட்டு இருக்கிறது.

மனிதர்களின் தலையை வெட்டிய நபர் அருகில் கத்தியுடன் ஆடி கொண்டிருக்கிறார். இந்த நரபலி பூஜையை சாமியார் ஒருவர் செய்வது போன்று வீடியோ பதிவு இருக்கிறது. இந்த வீடியோ பதிவை பார்த்த நடிகர் பார்த்திபன் அவர்கள் இது உண்மையா? இல்லை ஏதேனும் பட சூட்டிங்க்காக எடுக்கப்பட்டதா? என்று உண்மையை அறிந்து கொள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அதேவேளை அனைவரும் அறிந்து கொள்ள தனது எக்ஸ் தள பக்கத்தில் “இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது நரபலியா? இல்லை பட சூட்டிங்க்காக எடுக்கப்பட்ட காட்சியா என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.