சித்ராவின் அப்பா சொன்ன கடைசி வார்த்தை!! தற்கொலை செய்ய இது தான் காரணம்!!

0
291
The incident of late VJ Chitra's father hanging himself at home has created a lot of excitement
The incident of late VJ Chitra's father hanging himself at home has created a lot of excitement

VJ Chitra: மறைந்த விஜே சித்ராவின் தந்தை வீட்டில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரபல தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி சின்னத்திரையில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. தமிழக சின்னத் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தார். மேலும், அவர் வெள்ளித் திரைக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் அப்போது ஏற்பட்டு இருந்தது இந்த தொலைக்காட்சி தொடர்களை பார்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நடிகை சித்ரா தற்கொலை செய்தி வெளியானது.

அதாவது,  2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி பூந்தமல்லியில் உள்ள பிரபல ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பில் மர்மம் இருக்கிறது என்றும், சித்ரா உயிரிழந்ததற்கு அவரது கணவர் தான் காரணம் என சீதாவின் தந்தை சென்னை நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார். எனவே, சித்ராவின் கணவர் ஹேம்நாத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் சித்ரா  தற்கொலைக்கு அவரது கணவர் காரணம் இல்லை. அவர் எந்த குற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்து சிறைச்சாலையில் இருந்து ஹேம்நாத் விடுவிக்கப்பட்டார். நடிகை சித்ரா இறப்புக்கு முன் அவர் ஆசையாக கட்டிய வீட்டில் தான் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அதே வீட்டில் தான் அவரது தந்தை, தாய் வசித்து வருகிறார்கள்.

சித்ராவின்  தந்தை இன்று காலை சித்ராவின் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு அவர் நீண்ட நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.

Previous articleஇப்போதும் நிதீஷ் தேர்வு தவறுதான்..உண்மையான காரணம் இதுதான்!! மஞ்சரேக்கர் கூறுவது என்ன??
Next articleகம்மின்ஸ் இல்ல இவர்தான் கேப்டன்.. ஆஸ்திரேலியா அணி வெளியிட்ட பட்டியல்!! கேப்டனுக்கு அதிர்ச்சி!!