முஸ்லிம்கள் வாக்கை பெற செளமியா அன்புமணி செய்த சம்பவம்..பரபரக்கும் தர்மபுரி..!!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பிரச்சாரத்தை நொறுக்கி வருகிறார்கள். அந்த வகையில் தர்மபுரி தொகுதியில் செளமியா அன்புமணி செய்துள்ள சம்பவம் தான் தற்போது ஹைலைட்டே.
அதாவது இந்த தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அன்புமணியின் பாமகவிற்கு மொத்தம் 10 தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது. இதில், அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்காக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் மட்டுமின்றி அவரின் இரண்டு மகள்களும் தங்களின் அம்மாவிற்காக அவருடன் தர்மபுரியிலேயே தங்கி வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில், நேற்று தர்மபுரி பள்ளிவாசல் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட செளமியா அன்புமணி முஸ்லிம்கள் நிறைந்த பகுதி என்பதால், ஹிந்தியில் பேசி வாக்கு சேகரித்தார்.
இதனை சற்றும் எதிர்பாராத அவரின் தொண்டர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் கொஞ்சம் அதிர்ச்சி அடைந்தனர். இதுதவிர ஓட்டுப்பதிவு எந்திரத்தின் மாதிரியை வைத்து மாம்பழ சின்னத்திற்கு எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதையும் அவர் விளக்கியுள்ளார். முஸ்லிம்களின் வாக்கை பெறுவதற்காக ஹிந்தியில் பிரச்சாரம் செய்த செளமியா அன்புமணியின் இந்த செயலை பலரும் ஆச்சரியத்தோடு பார்த்து வருகிறார்கள்.
தர்மபுரியை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இதுதவிர சுயோட்சை வேட்பாளர்கள் வேறு உள்ளனர். இப்படி கடுமையான போட்டிக்கு மத்தியில் செளமியா அன்புமணியின் நூதன பிரச்சாரம் அவருக்கு கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.