ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்!

Photo of author

By Parthipan K

ஈரோடு மாவட்டத்தில் அரங்கேறிய சம்பவம்! குளியலறைக்கு சென்ற பெண் திடீர் மரணம்!

ஈரோடு மாவட்டம் 46 புதூர் உச்சிக்காட்டு வலசு திருமூலர் தேருவை சேர்ந்தவர் ராஜசேகரன். அவரது  மனைவியை குணவதி. அவர்களின்  மகன் அந்தியூர் பள்ளியில் படித்து வருகின்றான். வழக்கம் போல் ராஜசேகரன் தனது மகனை அழைத்து கொண்டு  அந்தியூர் பள்ளிக்குச் சென்றுள்ளார்.

அப்போது குணவதி வேலைக்கு செல்வதற்காக கிளம்பு கொண்டிருந்தார். குணவதி குளியலறைக்கு  சென்றார் அப்போது அவருக்கு எதிர்பாரதவிதமாக மயக்கம் ஏற்பட்டது. அந்த மயக்கத்தில் குணவதி குளியல் அறையிலேயே மயங்கி விழுந்தார். மேலும்  ராஜசேகரன் அந்த சமயம் பார்த்து  குணவதிக்கு போன் செய்துள்ளார். ஆனால் குணவதி  அந்த  போனை எடுக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் செய்து வீட்டில் எனது மனைவி இருக்கிறாரா என்று பார்த்து கூறுங்கள் என்று கூறினார்.

மேலும் இதனையடுத்து பக்கத்தில் உள்ளவர்கள் ராஜசேகரன் வீட்டிற்கு சென்றனர் அப்போது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. குணவதியை அழைத்து  பார்த்த போது குணவதி எந்த பதிலும்  அளிக்காததால் உடனடியாக ராஜசேகர்ரிடம்  தெரிவித்தனர். வீட்டிற்கு வந்து அக்கம்பக்கத்தின் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.

மேலும்  குணவதியை எங்கு தேடியும் கிடைக்காததால் குளியலறைக்கு சென்று பார்த்தார். அங்கே குணவதி கீழே மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம்   அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.  அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே குணவதி இறந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.  இந்த சம்பவம் குறித்து ஈரோடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட தகவலின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.