ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மேலும் இந்திய அணி இந்த தொடரில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இந்நிலையில் இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்த நிலையில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வென்றுள்ளது.
மூன்றாவது போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இரண்டாவதாக இந்திய அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் தொடர்ந்து 3 வது முறையாக ஸ்டார்க் பந்திற்கு ஆட்டமிழந்தார்.
முதல் போட்டியில் இந்திய அணி இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஸ்டார்க் பந்தினை எதிர்கொண்டு உங்கள் பந்து மிகவும் மெதுவாக வருகிறது என்று கூறியிருந்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆக்கினார் மிட்செல் ஸ்டார்க். இந்நிலையில் தொடர்ந்து மூன்றாவது போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களில் ஜெயஸ்வாலின் விக்கெட்டை வீழ்த்தினர் மிட்செல் ஸ்டார்க். இதற்கு பலரும் இவர் தான் வாயை கொடுத்து வாங்கி கட்டிகொண்டார் என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.