அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!!

0
142
The Indian team came into action and created a historic record!! Congratulations!!
The Indian team came into action and created a historic record!! Congratulations!!

அதிரடியாக களமிறங்கி வரலாற்று சாதனையை படைத்த இந்திய அணி!! குவியும் வாழ்த்துக்கள்!!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசிற்கு இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது. டிரினிடாட்டில் நடைபெறும் இந்த போட்டியின், இரண்டாவது இன்னிங்க்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்தது.

இதன் முதல் இன்னிங்க்ஸில் 183 ரன்கள் எடுத்த நிலையில், தற்போது அடுத்த இன்னிங்க்ஸில் அதிரடியாக களமிறங்கியது. இதில் கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பந்துகளை விலாசி அடித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளனர்.

இதன் இரண்டாவது இன்னிங்க்ஸில் ரோகித் ஷர்மா மற்றும் இஷான் கிஷனின் அதிவேகமான ஆட்டம் இந்திய அணி 100 ரன்களை எடுத்து சாதனை படைக்க உதவியது.

146  வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெறும் 12.2  ஓவர்களிலேயே 100 ரன்களை எடுத்து வரலாற்று சாதனை படைத்தது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்பு இந்த சாதனை பட்டியலில் இலங்கை இருந்தது. ஆனால் தற்போது அனைத்தையும் தட்டி தூக்கி இந்திய அணி மாசான வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீசிற்கு இடையேயான ஆட்டம் தற்போது சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. இதுவரை நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி முன்னிலை வகித்து வருகிறது.

வெஸ்ட் இண்டீசிற்கு வெற்றி பெற 365 ரன்கள் தேவை என்கிற பட்சத்தில் தற்போது 76/2 எடுத்திருக்கிறது. அதேப்போல் கரீபியன் அணி வெற்றி பெற 289 ரன்கள் தேவைப்படுகிறது. மேலும், இந்தியா இறுதி நாளில் எட்டு விக்கெட்களை எடுக்க வேண்டும்.

Previous articleஅடுத்தடுத்த அப்டேட்டை வெளியிடும் ஜெயிலர் படக்குழு!! படத்தின் ரன் டைம் இவ்வளவா??
Next article சென்னை மெரினாவில் பரபரப்பு!! வாலிபர் ஒருவர் செய்த விபரீத செயலால் அதிர்ச்சியடைந்த மக்கள்!!