cricket: இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டும் உலக டெஸ்ட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்ற னியாளியில் தொடரில் களமிறங்கியது.
இந்திய அணி நியூசிலாந்து உடன் சொந்த மண்ணில் 3 போட்டிகளில் தோல்வியை தழுவியது. மேலும் இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய இந்திய அணி இதில் 4 போட்டி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கிய நிலையில் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து அதிக விறுவிறுப்புடன் மூன்றாவது போட்டியானது தொடங்கியது. ஆனால் இந்த போட்டி சமனில் முடிந்தது. மேலும் இந்த போட்டி சமனில் முடிந்ததால் இந்திய அணி 55.8 புள்ளிகளுடன் எந்த மாற்றமும் இல்லாமல் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 58.8 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
தென்னாபிரிக்க அணி 63.3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேற இனி வரும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆகவேண்டிய நிலையில் உள்ளது. ஒரு வேலை இரு போட்டிகளில் தோல்வியடைந்தால் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேறும்.