இக்கட்டான நிலையில் உள்ள இந்திய அணி!! ஆறுதல் வெற்றி பெறுமா எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By Vijay

cricket: இந்திய-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றிபெறுமா? இந்திய அணி.

இந்தியா-நியூசிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் நாள் 14 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. இது இந்திய அணிக்கு பாதகமாக அமைந்துள்ளது என்றே கூறலாம். இந்திய அணி இந்த தொடரை 0-2 என்ற நிலையில் இழந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின்  முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. அதனால் நியூசிலாந்து அணி இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.இதன் மூலம் இந்திய அணியின் 12 வருட சாதனையை உடைத்துள்ளது.

The Indian team is in dire straits
The Indian team is in dire straits

இந்த தொடரின் மூன்றாவது போட்டி தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முன்னேறுவதற்கு அவசியமான போட்டியாகும்.

முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 100 ரன்கள் எட்டுவதற்கு முன்பு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 400 ரன்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்புள்ளது.