இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் அதிக ரன் அடிக்கும் வீரராக ரோஹித் கோலி இருக்க போவதில்லை ரிஷப் பண்ட் தான் மற்றும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவர்தான் தொடரில் அதிக ரன்கள் எடுத்த நபராக இருப்பார்கள் ரிக்கி பாண்டிங் கருத்து.
இந்திய அணி வருகின்ற நவம்பர் 22 ஆம் தேதி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து தொடரில் தோல்வியை தழுவிய காரணத்தால் ஆஸ்திரேலியா தொடரில் நிச்சயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறுகையில் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியானது தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். அணியில் ஷமி இடம்பெறாதது இந்திய அணிக்கு பெரிய சிக்கலாக உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில் எப்படி 20 விக்கெட்டுகள் எடுக்க போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் இந்திய அணி நல்ல பேட்டிங் லைன் அப் வைத்துள்ளது. அதில் நிச்சயம் ஏதேனும் ஒரு போட்டியில் வெல்லும் இருந்தாலும் ஆஸ்திரேலியா அணி தந்து சொந்த மண்ணில் கூடுதல் அனுபவத்துடன் இருபதனால் 3-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் என்று கூறினார்.