cricket: இந்திய அணி ஆஸ்திரேலியாவில் மேற்கொண்ட சுற்றுபயணத்தில் தோல்வியடைந்தும் சாதனை படைத்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த சுற்றுபயணத்தில் இந்திய அணி 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் என கூறப்பட்ட நிலையில் இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
இந்திய அணியில் பேட்டிங் சீராக இல்லாத காரணத்தால் அதிகமான அளவிற்கு ரன் குவிக்க முடியவில்லை. மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அவுட் ஆப் பார்ம் என்றே சொல்லலாம். அதுமட்டுமல்லாமல் மற்ற வீரர்களும் பேட்டிங்கில் சரியான ஆட்டத்தை வெளிபடுத்தவில்லை ரன் செர்ர்கவில்லை . மேலும் இந்திய அணியில் பும்ரா மட்டுமே பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார். அவர் 9 இன்னிங்ஸில் விளையாடி 32 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த டெஸ்ட் போட்டி தொடர் வரலாற்றில் ஆஷஸ் தொடர் இல்லாமல் ஒரு போட்டி ஆஸ்திரேலியாவில் அதிகமானோர் பார்த்தது இதுவே முதல் முறை. இந்த போட்டி தொடரில் மொத்தம் 8,37,879 ரசிகர்கள் கலந்து கொண்டு கண்டு ரசித்துள்ளனர்.இதை அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடுமையாக மோதிகொண்டன என கூறப்படுகிறது.