போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

0
140
The information published by the transport corporation! Good news for passengers!
The information published by the transport corporation! Good news for passengers!

போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்!பயணிகளுக்கு குட் நியூஸ்!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும்   350 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக தொலைதூரங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் முன்பதிவு செய்து செல்லலாம் எனவும் பயணிகள் திரும்பி வர வசதிக்காக சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்துகளின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பூ, பொரி, பழங்கள், விநாயகருக்கு குடை ஆகியவற்றின் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் அரசு விடுமுறை என்பதால், பிற மாவட்டங்களில் தங்கி வேலை செய்வர்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு வசதிக்காக சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு நேற்றிலிருந்து  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பாக போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்  போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் அறிவுறுத்தலின்படி  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக விநாயக சதுர்த்தியை முன்னிட்டு 350 சிறப்பு பேருந்துகள்  சென்னையில் இருந்து அனைத்து இடங்களுக்கும் இயக்கப்பட உள்ளது. இச்சேவையை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்தி கொள்ளும்படியும் போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Previous articleவிநாயகரை தூக்கி சென்ற இருவர் பலி!!அதில் மறைந்திருக்கும் மர்மம் என்ன?
Next articleமகளுக்கு நீதி கேட்க சென்ற தாயிற்கு நேர்ந்த பரிதாபம்! போலீசாரின் வெறி செயல்!