மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

Photo of author

By Parthipan K

மத்திய ரயில்வே துறை வெளியிட்ட தகவல்! இவ்வாறு பயணம் செய்தவர்களிடம்மிருந்து 126 கோடி வசூல் மக்களே உஷார் !

மத்திய ரயில்வேயில் பயணிகளிடையே தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பை பலபடுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து  ரயில்வே நிலையங்கள் மட்டுமின்றி டிக்கெட் பரிசோதகர்கள் மின்சார ரெயில்களிலும்
சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் இதன் மூலம் கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான 4 மாதங்களில் ரயிலில் டிக்கட் இல்லாமல் பயணம் செய்தவர்கள்  18 லட்சத்து 37 ஆயிரம் பேர் பிடிபட்டனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ126 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது என மத்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த வசூலில் ஜூன் மாதம் மட்டும் இரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் ஆக உள்ளது.  மேலும் அவர்களிடமிருந்து 20 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்த ஏழரை லட்சம் பேர் பிடிபட்டு அவர்களிடமிருந்து 45 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

மேலும்  கடந்த ஆண்டை ஒப்பிடுகையில்  நடப்பாண்டில்  180 சதவீதம் அதிகம் அபராதம்  வசூலிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய ரயில்வே துறை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாத நிலையில் அதிகரித்த வண்ணம் உள்ளது எனவும் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரயிலில் பயண சீட்டு இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து அபராதம் மட்டும் வசூலிக்க படாமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய ரயில்வே துறைக்கு பரிந்துரை வந்த வண்ணம் உள்ளது எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.