தமிழக அரசு வெளியிட்ட தகவல்! அனைவரும் வங்கி கணக்கு தொடங்க நடவடிக்கை!
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களில் 14.86 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்குகள் இல்லை.மேலும் ஒரு சிலர் வங்கி கணக்கு வைத்திருந்தாலும் வங்கி கணக்குடன் ஆதார் எண்னை இணைக்காததால் வங்கி கணக்கு இல்லை எனவே தரவுகள் காட்டுகின்றது.
முன்னதாகவே வங்கி கணக்கு இல்லாதவர்கள் உடனடியாக மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பாலன்ஸ் வங்கி கணக்கை தொடங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அந்த உத்தரவை பின்பற்றுவதற்கான வழிமுறைகள் சபந்தப்பட்ட அலுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வங்கி கணக்கு எண் இல்லாத ரேஷன் அட்டைதாரர்களுக்கு விவரக் குறிப்புகள் அடங்கிய தாளை கொடுக்க வேண்டும். அந்த தாளில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து நான்கு நாட்களுக்குள் அந்தந்த ரேஷன் கடைகளில் ஒப்படைக்க வேண்டும்,
முன்னதாகவே வங்கி கணக்கு எண் வைத்திருந்தால் சம்மந்தப்பட்ட ரேஷன் கடை பணியாளர்கள் ரேஷன் அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் நகல் ,ரேஷன் அட்டை நம்பர் ,குடும்பத்தலைவர் பெயர் போன்றவைகள் குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.