தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வழங்கும் தேதி வெளியீடு! 

Photo of author

By Parthipan K

தமிழக அரசு வெளியிட்ட தகவல்! பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன் வழங்கும் தேதி வெளியீடு!

தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்காக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம்.அந்த வகையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி,வெல்லம்,முந்திரி ,கரும்பு,திராட்சை உள்ளிட்ட பொருட்களுடன் ரொக்கப்பணம் ஆகியவை ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

அந்த வகையில் கடந்த ஆண்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பொருட்கள் அனைத்தும் தரமற்றதாக இருந்ததாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

அதன் காரணமாக தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் ஆலோசானை கூட்டம் நடத்தினார்.அந்த ஆலோசனை கூட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி,ஒரு கிலோ சர்க்கரை மற்றும் அவற்றுடன் ரூ 1000 ரொக்கப் பணம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு அனைவருக்கும் வழங்கப்பட உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகாளாக கொரோனா பரவல் கராணமாக கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுப்பதற்கு ரேஷன் கடைகளில் எந்த பொருள் வழங்கினாலும் அதற்கென ஒவ்வொருவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது.

அந்த டோக்கன் மூலமாக யார் எந்த தேதியில்  எந்த நேரத்தில் வந்து பொருட்களை பெற்றுகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருக்கும்.  அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தில் பொருட்களை வாங்க வரும்பொழுது கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க முடிந்தது.

அந்த வகையில் தற்போதும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க பொங்கல் ரொக்கப் பணம் பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் ரூ 1000 வழங்குவதை வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.