ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டம்!!முதலமைச்சர் வழங்கிய அரசாணை!!

0
120
The insurance plan increased to Rs.2 lakh!!
The insurance plan increased to Rs.2 lakh!!

தமிழ்நாடு அரசு சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்த நம்மை காக்கும் 48 திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சை 1 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், தற்பொழுது அதனை அதிகரித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.

இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் நோக்கம் :-

முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டம் என பெயர் மாற்றப்பட்ட இத்திட்டமானது 2018 ஆம் ஆண்டு இந்திய சுகாதாரத்துறையுடன் சேர்ந்து பணியாற்ற துவங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு முதலமைச்சர் ஆக மு க ஸ்டாலின் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது, இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார்.

இத்திட்டத்தின் மூலம், விபத்து ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி மற்றும் சிகிச்சை அளிக்கும் வண்ணம் துவங்கப்பட்டதை திட்டமானது தனியார் மருத்துவமனைகளில் கூட 1 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவ காப்பீடாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 48 மணி நேரத்தில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்ட உயிர்களை காக்க வேண்டும் என்பது இத்திட்டத்தினுடைய முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது.

மேலும் தற்பொழுது, 2030-ம் ஆண்டுக்குள் இறப்பு சதவிகிதத்தை 30 ஆக குறைக்கும் நோக்கில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.2 லட்சம் ரூபாயாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உயர்த்தி இருக்கிறார்.

இதற்காக, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, சுகாதாரத் துறை, நிர்வாகம் ஆகியவை இணைந்து செயல்பட்டு தொற்ற நோய்களான விபத்து மற்றும் தற்கொலை போன்ற இறப்புகளின் விகிதத்தை குறைப்பதற்காக பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleசில்லி பொடியை கொண்டு இப்படி செய்தால்… ஹார்ட் அட்டாக் வந்தவரை காப்பாற்றிவிடலாம்!!
Next articleசத்துணவு பணியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! ரூ.600 லிருந்து உயர்த்தப்பட்ட பொறுப்பு படி!!