உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!!

Photo of author

By Rupa

உளவுத்துறை சொன்ன அந்த தகவல்!! அமைச்சருக்கு பறந்த திடீர் கால்.. ரைட் லெப்ட் வாங்கிய முதல்வர்!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் குறித்த விவாதமானது கடந்த 19ஆம் தேதி தொடங்கியது.இரு வேலைகளிலும் இருத்துறை அமைச்சர்கள் பட்ஜெட் குறித்த விவாதம் செய்து வருகின்றனர்.அந்த வகையில் நேற்று மதுவிலக்கு ஆயத்தீர்வை பட்ஜெட் விவாதமானது நடைபெற்ற பொழுது அமைச்சர் துரைமுருகன் சர்ச்சைக்குரிய விதமாக பேசினார்.தற்பொழுது இது பூதகரமாக வெடிக்க தொடங்கியுள்ளது.

டாஸ்மாக்கில் விற்கப்படும் சரக்கில் கிக்கு இல்லை என்றும் வேலை முடித்துவிட்டு அசதியில் வருபவர்கள் கிக்கில்லாத சரக்கை அருந்த விரும்பாததால் தான் கள்ளச்சாராயத்தை தேடுகின்றனர் என்று கூறினார்.இவ்வாறு அவர் பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.மேற்கொண்டு இவர் கள்ளச்சாராயம் குடிப்பது சரிதான் என்பதை நியாயப்படுத்தும் விதமாக பேசுகிறார் எனவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே முதல்வருக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையில் நிர்வாகிகள் சர்ச்சைக்குரிய விதமாக பேசி விடுகின்றனர்.அவ்வாறு பேசும் நிர்வாகிகளை கண்டிக்கும் வகையில் ஸ்டாலின், பேச்சில் கவனம் தேவை என்று அறிவுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.இருப்பினும் நிர்வாகிகளின் பேச்சு திமிரானது சற்றும் குறைந்ததாக இல்லை.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் 63 உயிர்களுக்கு மேல் பலியாகியுள்ள நிலையில் திமுக வுக்கு எதிராக அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் அதனை நியாயப்படுத்தும் விதமாக திமுக தலைமையில் இருக்கும் அமைச்சர் இப்படி பேசுவது சரிதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி உட்க்கட்சிக்குள்ளையே பல நிர்வாகிகள் இவரின் பேச்சுக்கு எதிர்ப்புதான் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் இது முதல்வருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம். அதுமட்டுமின்றி கள்ளச்சாராய விவகாரத்தில் முக்கிய புள்ளியாக திமுக இருக்கும் பட்சத்தில் உளவுத்துறை மூலம் மக்களின் மனநிலையை அறிய முதல்வர் முடிவு செய்துள்ளாராம்.வரப்போகும் தேர்தலில் பின்னடைவை சந்தித்து விடுவோம் என்ற அச்சத்தினால் முதல்வர் இவ்வாறான முடிவை எடுத்திருக்கலாம் என கூறுகின்றனர்.

அதுமட்டுமின்றி புதிதாக பெரிய நட்சத்திரம் அரசியலில் இறங்க உள்ள நிலையில் இது அனைத்தும் இவருக்கு பெரும் அடியாக இருந்துவிடக் கூடாது என்பதற்காக முன் நடவடிக்கை எடுக்க இவ்வாறான உளவுத்துறை அமைக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.