உண்டியலில் விழுந்த ஐபோன்!! முருகனுக்கே சொந்தம் என்று கூறிய நிர்வாகம்!!

0
83

செங்கல்பட்டு மாவட்டத்தின் மையத்தில் அமைந்திருக்கக் கூடிய திருப்போரூர் கந்தசாமி கோவிலின் உண்டியலில் தவறுதலாக ஐபோனை போட்ட பக்தர். உண்டியலில் விழுந்த அனைத்தும் கோவிலுக்கு சொந்தம் என்று கூறிய கோவில் நிர்வாகம்.

திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. தமிழ் மொழியில் திருப்போரூா் என்ற தமிழ்ச் சொல்லின் பொருள் “புனிதப் போரின் இடம்” என்பது ஆகும்.

இப்படிப்பட்ட பெயர் சிறப்பு கொண்ட முருகப்பெருமானின் கோவிலுக்கு வழிபாட்டிற்காக சென்ற பக்தர் ஒருவர் ஆறு மாதத்திற்கு முன்பு தன்னுடைய ஐபோனை தவறுதலாக உண்டியலில் போட்டு உள்ளார். தற்பொழுது அந்த உண்டியலில் காணிக்கைகள் எண்ணுவதற்காக திறக்கப்பட்ட இப்பொழுது அதில் ஐபோன் இருப்பது தெரியவந்து கோவில் நிர்வாகமானது அதனுடைய உரிமையாளரை வரவழைத்துள்ளனர்.

பக்தர் நடந்த விவரங்களை விளக்கவே, கோவிலின் உண்டியலில் விழுந்த அனைத்தும் கோயில் நிர்வாகத்திற்கே சொந்தம் என்று கூறி அந்த ஐபோனில் உள்ள தரவுகளை மட்டும் தாங்கள் எடுத்துக் கொள்ளும்படி கோவில் நிர்வாகிகள் தெரிவித்திருக்கின்றனர்.

6 மாதங்களுக்குப் பின்பு தன்னுடைய ஐபோன் கிடைத்துவிட்டது என்று ஆனந்தப்படவும் முடியாமல், கந்தனுக்காக தானே விட்டு செல்கிறோம் என்று மன நிம்மதியும் இல்லாமல் வருத்தத்துடன் திரும்பியுள்ளார் ஐபோனை தவறவிட்ட பக்தர்.

வருத்தத்துடன் சென்ற வருடம் கோவில் நிர்வாகமானது, இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு தகவல் அளிக்குமாறும் தெரிவித்து இருக்கின்றனர்.

Previous articleஇதுக்கு ஒரு முடிவே கிடையாதா?? மீண்டும் தொடக்க வீரர் சர்ச்சை.. யார் தான் களமிறங்குவது??
Next articleஅப்டேட் ஆகும் அரசு கேபிள் டிவி கனெக்சன்!! இனி அனைத்து சேனல்களும் HD உடன்!!