புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம்!!

0
220
#image_title

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பகுதியில் கல்குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரம்!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

மாவட்ட ஆட்சியரின் அறிக்கையும் தாசில்தார் அறிக்கையில் முரண்பாடு உள்ளது எப்படி – நீதிபதிகள் கேள்வி.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய பதில் அறிக்கையில் தேதி குறிப்பிட வேண்டும் என்ற விதி கூட உயர் அதிகாரிகளுக்கு தெரியாதா..? தேதி குறிப்பிடாமல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை நிராகரித்து நீதிபதிகள் உத்தரவு.

புதுக்கோட்டை மாவட்டம் ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த ராமசாமி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா விராட்சிமலை பகுதியில் உள்ள வி.லெட்சுமி புறம் கிராமத்தில்கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இந்த பகுதி சுற்றிலும் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் மேலும் பழமையான புரதான சின்னங்கள் நிறைந்த சிவன் கோவில் உள்ளது அதன் அருகில் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் கிறிஸ்துவ ஆலயங்களும் உள்ளன.

இவ்வாறு குடியிருப்புகள் உள்ள பகுதியில் கல் குவாரி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என சட்ட விதிகளும் உயர்நீதிமன்ற உத்தரவு தெளிவாக உள்ள நிலையில் இதனை மீறி இந்த கல்குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் கல்குவாரி நடத்துபவர்கள் இந்த பகுதியில் செல்லக்கூடிய நீர்நிலை வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து லாரி செல்லும் சாலையாக மாற்றி உள்ளனர்.

இதனால் இந்த பகுதியின் விவசாயமும் பாதிக்கப்படுகிறது எனவே சட்ட விதிகளுக்கு முரணாக கல் குவாரி நடத்த அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர் சுப்பிரமணியன் விக்டோரியா கௌரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கல்குவாரி அருகில் கோவில், பஞ்சாயத்து அலுவலகம் , மற்றும் நீர்நிலை ஆக்கிரப்பு செய்வதற்கான ஆவணங்கள் புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைப் பார்த்த நீதிபதிகள் இந்த சூழலில் எவ்வாறு கல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பினார்கள்.அரசு தரப்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அந்தப் பகுதி வட்டாட்சியர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதை படித்த நீதிபதிகள் வட்டாட்சியர் கல்குவாரி சுற்றி கோவில் குளங்கள் குடியிருப்பு இருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் அவ்வாறு ஏதும் குறிப்பிடவில்லை எவ்வாறு இப்படி முரணான அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என கேள்வி எழுப்பினார்கள்.

அதேபோல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அறிக்கையிலும் ஆவணங்களில் தேதி குறிப்பிடாமல் வெறும் கையெழுத்து மட்டும் போடப்பட்டிருந்தது இதனை பார்த்து கோபமடைந்த நீதிபதிகள்.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடிய அறிக்கையில் தேதி குறிப்பிட வேண்டும் என்ற விதி கூட மாவட்ட ஆட்சியருக்கு தெரியாதாஒரு ஐஏஎஸ் படித்த அதிகாரி இவ்வாறு எப்படி நடந்து கொள்ளலாம் என கேள்வி எழுப்பினார்கள்.

எனவே மாவட்ட ஆட்சியரின் இந்த அறிக்கை எதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறு நீதிமன்றத்திற்கு முறையாக அறிக்கை தாக்கல் செய்யாத புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைதனர்.

Previous articleகேரளாவில் முஸ்லீம்கள் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரம்ஜான் வாழ்த்து சொல்ல பா.ஜனதாவினர் முடிவு!
Next articleநிலவிலிருந்து பார்த்தாலும் தமிழ்நாட்டில் இனிமேல் இது தெரியும்! சுற்றுச்சூழல் அமைச்சரின் புதிய திட்டம்!