நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்!

Photo of author

By Savitha

நாகை அருகே அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரம்: கடந்த 30 ஆம் தேதி காணாமல் போன செவிலியர் சுஷ்மிதா என்பது விசாரணையில் உறுதி: பாலியல் பலாத்காரமா? அல்லது காதல் விவகாரமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை.

நாகை மாவட்டம் சிக்கல் கீழவெளி பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள பெண்கள் சிலர் விறகு வெட்டுவதற்காக அருகாமையில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். அப்போது அங்கு அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் கீழ்வேளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முழுவதுமாக உடல் அழுகிய நிலையில் இருக்கும் அந்தப் பெண் யார் எந்த பகுதியைச் சேர்ந்தவர் என கணிக்க முடியாத அளவிற்கு உடல் முழுவதுமாக அழுகி இருந்தது.

இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள 15 காவல் சரக எல்லைக்குட்பட்ட காவல் சலங்கையில் அண்மையில் காணாமல் போன பெண்ணின் விவரங்களோடு ஒப்பிட்டு விசாரணை பணி தீவிர படுத்தப்பட்டது.

பெண் அணிந்திருந்த உடையை வைத்து, ஒப்பிட்டுப் பார்த்ததில் இவர் கீழையூர் தையாந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பக்கிரிசாமி மகள் சுஸ்மிதா என்பது தெரியவந்தது. 25 வயதான இவர் செவிலியராக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.

அண்மையில் சொந்த ஊர் திரும்பிய இவர் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காணாமல் போயியுள்ளார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

எங்கு தேடியும் பெண் கிடைக்காத நிலையில் நேற்று முன்தினம் அவர் உடல் அழுகிய நிலையில் நாகை மாவட்டம் கீழவெளி கருவை காட்டிற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அருகே இளம் செவிலியர் மர்மமான முறையில் கருவேல மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

மரணத்தில் கிடைத்துள்ள திடுக்கிடும் பிண்ணனிகள்:

செவிலிய பெண் கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காணாமல் போன நிலையில், இவருடைய காதலர் அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் மே 1ஆம் தேதி அந்தணப்பேட்டை பகுதிக்கு அருகாமையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.

அதாவது பார்த்திபன் உயிரிழந்த இடத்திற்கு அருகாமையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கருவேலங்காட்டில் சுஷ்மிதா உடல் தற்பொழுது மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் பலாத்காரமா? காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.இந்நிலையில் 25 வயதான இளம் செவிலியரின் உடல் அழுகி நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவத்தின் பின்னணி அனைத்தும் முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.