சமீபத்தில் திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசலில் ஆடு, கோழிகளை பலி கொடுக்க சென்ற முஸ்லிம் மதத்தினரை போலிஸார் பலி கொடுக்க கூடாது என்று தடை விதித்திருந்தனர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் அங்கு போராட்டம் நடத்தியிருந்தனர். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று அங்கு நிச்சயமாக பழி கொடுக்கக் கூடாது என்று இந்து அமைப்பினரும் இதனை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்துள்ளனர். போலீசார் இரு தரப்பினர் மீதும் 400 வழக்குகளுக்கு மேல் வழக்குப் பதிந்துள்ளனர். இவ்வளவு நாள் சிக்கந்தர் கோயிலில் பழி பற்றி ஏதும் பிரச்சனை வந்ததில்லை. திடீரென்று தற்சமயம் கிளம்புவது ஏன்? என பல தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சூழ்நிலை இப்படி இருக்க தற்போது மற்றும் ஒரு பிரச்சினை உருவாகி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் காசி விஸ்வநாதரின் ஆதிப் பெரும் பழங்கோயிலில் உள்ளது. அக்கோயில் வழிபாடு செய்வதற்காக இந்து மதத்தை சார்ந்த மதுரை ஆதீனம் ஹரிஹர ஞான சம்பந்த தேசிக சுவாமிகள் செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால், தற்சமயம் நடந்துள்ள பிரச்சினை காரணமாக போலீசார் அவரை மலை ஏற அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சுவாமிகள் பத்திரிகையாளர் சந்திப்பில், மற்ற சமூகத்தினர் ஏதேனும் பிரச்சினை செய்வாரா? என்ற கோணத்தில் போலீசார் என்னை மலையேற அனுமதிக்காமல் இருந்திருக்கலாம்.
போலீசார் கோயிலின் பூஜையையும், பள்ளிவாசல் தொழுகையையும் அந்தந்த மதத்தினர் கடைப்பிடிக்க அனுமதிக்க வேண்டும். மத வழிபாட்டை தவிர மற்ற சடங்குகளுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மலையேற சுவாமிகளுக்கு தடை விதித்ததை அடுத்து இவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.