அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!!

அதிரடி பட்டையை கிளப்பிய ஜெயிலர்!! ரூ.500 கோடி  கிளப்பில் இணைய போகும் வசூல் சாதனை!! 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெய்லர் மூவி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி செராப், உள்பட பலர் நடித்து நெல்சன் திலிப் குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது இந்த திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் நேற்று வெளியிட்டது. அதன்படி முதல் வாரம் இந்த படம் ரூ.375 கோடிக்கு மேல் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது. வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும் இந்த படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இரண்டாவது வாரம் தொடங்கிய நிலையில் தற்போதும் வரவேற்பு குறையாமல் வசூலை குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 8 நாட்களில் ரூ.235 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஜெயிலரின் இந்த அதிரடி இன்னும் பல நாட்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து இரண்டாவது வார முடிவில் ஜெயிலர் உலக அளவில் 500 கோடி வசூல் கிளப்பில் இணைய இருக்கிறது.