30000 பேரை கொன்ற கொலைகார விமானம்!! நடுங்க வைக்கும் பின்னணி!!
30000 மக்களை கொலை செய்த கொலைகார விமானம் என்று அழைக்கப்படும் SKY Van PA-51 என்ற விமானம் மக்களின் கோரிக்கை காரணமாக காட்சிபடுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் சில கருப்பு பக்கங்கள் இருக்கின்றது. அந்த வகையில் அர்ஜென்டினா நாட்டுக்கும் கருப்பு பக்கங்கள் இருக்கின்றது. அந்த வகையில் 1976ம் ஆண்டு முதல் 1983ம் ஆண்டு வரையிலான 7 ஆண்டுகள் அர்ஜென்டினா நாட்டின் கருப்புப் பக்கத்திற்கு காரணமாக உள்ளது.
இந்த ஏழு ஆண்டுகளில் அர்ஜென்டினா நாட்டில் ஒரு சில காரணங்களால் இராணுவ ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த இராணுவ ஆட்சியால் அர்ஜென்டினா நாடு மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இந்த இராணுவ ஆட்சி காலத்தில் அரசை விமர்சித்தவர்கள் சுமார் 30000 முதல் 60000 பேரை இராணுவம் கொலை செய்துள்ளது. இவர்கள் கொலை செய்ய பயன்படுத்திய விமானம் தான் கொலைகார விமானம் என்று அழைக்கப்படும் ஸ்கை வேன் பிஏ-51 விமானம் ஆகும்.
அரசை விமர்சித்தவர்கள் அனைவரும் இந்த விமானத்தில் ஏற்றிவரப்பட்டு வானத்தில் இருந்து கடலுக்குள்ளும் ஆற்றுக்குள்ளும் தள்ளி விடப்பட்டு மூழகடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அப்போது இருந்த அர்ஜெண்டினா இராணுவ அரசு இவர்களை விமானத்தில் ஏற்றி நிர்வாணப்படுத்தி ரியோ டி லா பிளாட்டா ஆறு மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களில் தூக்கி வீசப்பட்டு கொலை செய்யப்பட்டனர். அவ்வாறு தூக்கி எறியப்படும் மக்களில் ஒருவர் கூட உயிர் பிழைக்க வில்லை.
இந்த கொலைகார விமானத்தை தற்பொழுது வரை அமெரிக்கா பத்திரப்படுத்தி பாதுகாத்து வருகின்றது. மக்களின் கோரிக்கைக்கு இணங்க அமெரிக்காவில் இருக்கும் இந்த விமானம் தற்பொழுது அர்ஜெண்டினாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இந்த கொலைகார விமானம் காட்சிபடுத்தப்படவுள்ளது.