நாம் பெரும்பாலும் மணத்தக்காளி,சிறுகீரை,முருங்கை கீரை போன்றவற்றை உணவாக செய்து சாப்பிட்டு வருகின்றோம்.ஆனால் இந்த கீரைகளைவிட எண்ணிலடங்கா ஊட்டச்சத்துக்கள் கொண்ட சிலவகை கீரைகளின் பெயர் கூட நமக்கு தெரியாமல் இருக்கிறது.இப்படி நாம் பார்க்காத மற்றும் அதிகம் பயன்படுத்தாத கீரைகள் வரிசையில் “பொன்னாங்கண்ணி” கீரை இடம் பெற்றிருக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை அதீத மருத்துவ குணங்கள் நிறைந்தவையாகும்.இந்த கீரையில் கூட்டு,கடையல்,பொரியல்,குழம்பு என்று உணவுகள் செய்து சாப்பிடலாம்.இக்கீரையில் பாஸ்பரஸ்,புரதம்,கால்சியம்,நல்ல கொழுப்பு,வைட்டமின் ஏ,வைட்டமின் பி,வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்திருக்கிறது.
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்:
1)உடல் சூட்டை தணிக்க பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடலாம்.கண் பிரச்சனைகளை குணப்படுத்த இந்த கீரையை சாப்பிடலாம்.
2)செரிமான மண்டல ஆரோக்கியத்தை மேம்படுத்த பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடலாம்.பொன்னாங்கண்ணி கீரையை தேங்காய் எண்ணையில் வதக்கி சாப்பிடலாம்.
3)பொன்னாங்கண்ணி கீரையை நெயில் வதக்கி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
4)கண் பார்வை குறைபாடு இருப்பவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை ஜூஸாக செய்து பருகலாம்.
5)பொன்னாங்கண்ணி கீரையில் உப்பு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.
6)பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல்,ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் குணமாகும்.
7)சருமம் சம்மந்தபட்ட பிரச்சனைகள் குணமாக பொன்னாங்கண்ணி கீரை சாறு பருகி வரலாம்.
8)முடி வளர்ச்சியை அதிகரிக்க பொன்னாங்கண்ணி கீரையை பருப்பில் சேர்த்து சாப்பிடலாம்.மாலை கண் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி கீரையை வேகவைத்து சாப்பிடலாம்.
9)பொன்னாங்கண்ணி கீரையை அடிக்கடி உணவாக சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் குணமாகும்.
10)மூல நோய்,மண்ணீரல் பாதிப்பு,கல்லீரல் பாதிப்பு குணமாக பொன்னாங்கண்ணி கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.