ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது-முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்!!

Photo of author

By Savitha

கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான தொடர் போராட்டத்தால் அந்த திட்டமே முடங்கும் சூழல் ஏற்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் ஆளுமையால் கூடங்குளம் திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேரவையில் தெரிவித்தார்.

மின்சாரத் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர் , வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை தமிழகம் கொண்டுவர தென் மாநிலங்களில் மத்திய அரசு மின் வழித்தடம் அமைக்க காரணமாக இருந்தவர் ஜெயலலிதா என்று கூறினார்.

கூடங்குளம் அனுவுலை பிரச்சனையை ஜெயலலிதா ஆளுமையுடன் வெற்றிகரமாக கையாண்டு மின் உற்பத்தியை தொடங்கினார் என்று நத்தம் விஸ்வநாதன் கூறிய நிலையில் இடைமறித்து பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகை முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் , முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுமே கூடங்குளம் அணுவுலை அமைய காரணமாக இருந்தனர் என்று தெரிவித்தார்.