உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்!

Photo of author

By Hasini

உயிரிழந்தவர்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய தலைவர்! காரணம் இதுதான்!

உத்திரபிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் 3ஆம் தேதி நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மாநில துணை முதல்வர் கலந்து கொள்ள இருந்தது. மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்  மிஸ்ராவின் சொந்த ஊரான திகினியாவில் நடைபெற்றது. அதன் காரணமாக அங்கு நூற்றுக்கணக்கான விவசாயிகள் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்புக் கொடி ஏந்தி சாலையில் திறந்தனர்.

அப்போது விவசாயிகளின் மீது பாஜகவினர் சென்ற கார் வேண்டுமென்றே பின்பக்கம் இருந்து மோதியதன் காரணமாக இரண்டு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தின் காரணமாக 4 விவசாயிகள் உட்பட எட்டுப்பேர் மொத்தம் உயிரிழந்தனர்.

அதில் ஒரு பத்திரிக்கை நிபுணரும் சேர்ந்து இறந்துள்ளார். அவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். அந்த பாஜகவினரின் வாகனத்தில் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மீஸ்ராவும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கடந்த நவம்பரில் இருந்து வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் அமைதியாகதானே செய்தனர். அங்கே சம்பவ இடத்திற்கு சென்ற காங்கிரஸ் கட்சியினரும் அங்கே அங்கே கைது செய்து கொண்டிருந்தனர். இடத்தில் அப்படியே தடுத்து நிறுத்தப் பட்டனர். இதன் காரணமாக நாடு முழுவதும் அவர்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகள் மீது காரை ஏற்றிய ஆஷிஸ் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது தந்தை பதவி விலக வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த வன்முறை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்த வன்முறை காரணமாக மந்திரியின் மகன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆஷிஷ் பாண்டே மற்றும் லவ்குஷ் ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். மத்திய மந்திரியின் மகனுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர். அப்படி ஆஜர் ஆகவில்லை என்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அந்த வன் முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் பேசுகையில் உண்மையை தெரிந்து கொள்ளும் விதமாக வன்முறையில் நடந்த சம்பவங்கள் பதியப்படும் வீடியோக்களையும், தகவல்களையும் பகிர்வதை தடுக்கவே இணையதள சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது என்றும் கூறினார்.