இன்று ஐபிஎல் வரலாற்றில் ஒரே நேரத்தில் 2 லீக் போட்டிகள்.!!

0
83

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இன்று ஒரே நேரத்தில் 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ்அணி,ஹைதராபாத் அணியையும், பெங்களூர் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியையும் எதிர்கொள்கின்றன. இந்த இரண்டு போட்டிகளும் இன்று இரவு ஒரே நேரத்தில் நடைபெற உள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது அக்டோபர் 15-ம் தேதியுடன் ஐபிஎல் 14 சீசன் முடிவடைய உள்ள நிலையில் இன்றையதினம் கடைசி லீக் போட்டிகள் நடைபெற உள்ளது.

தற்போதுள்ள புள்ளி பட்டியலில் டெல்லி கேப்பிடல், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய மூன்று அணிகள் தகுதி பெற்று விட்ட நிலையில் இன்னும் ஒரு அணி எந்த அணி என்பது இன்று தெரியவரும்.

இந்நிலையில் இன்றுடன் ஐபிஎல் 2021 லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. அதேசமயம் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி, 55 வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் ஹைதராபாத் அணி, மும்பை அணியையும் , 56வதுலீக் போட்டி பெங்களூரு அணி, டெல்லி அணியையும் எதிகொள்கின்றன .
இந்த இரு போட்டிகளும் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை VS ஹைதராபாத்  ( போட்டி -55 )

எதிர்பார்க்கப்படும் ஹைதராபாத் அணி;ஜேசன் ராய், அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (சி), ப்ரியம் கார்க், அப்துல் சமத், விருத்திமான் சாஹா (wk), ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், உம்ரான் மாலிக்.

எதிர்பார்க்கப்படும் மும்பை ; அணி:ரோஹித் சர்மா (c), இஷான் கிஷன் (wk), சூர்யகுமார் யாதவ், சௌரப் திவாரி, ஹர்திக் பாண்டியா, கியரோன் பொல்லார்ட், ஜேம்ஸ் நீஷாம், நாதன் கூல்டர்-நைல், ராகுல் சாஹர்/ஜெயந்த் யாதவ், ட்ரெண்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.

பெங்களூர் VS டெல்லி ( போட்டி -56 )

எதிர்பார்க்கப்படும் பெங்களூர் அணி: விராட் கோலி (c), தேவதூத் படிக்கல், ஸ்ரீகர் பாரத் (wk), க்ளென் மேக்ஸ்வெல், AB டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல்.

எதிர்பார்க்கப்படும் டெல்லி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (சி & விகே), ரிபால் படேல், சிம்ரான் ஹெட்மியர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே.