இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!!

Photo of author

By CineDesk

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முன்னணி நடிகர்!! வழக்கில் அதிரடி முடிவு!!

மலையாள சினிமாவில் மிக பிரபலமான நடிகர் உன்னி முகுந்தன்.  இவர் தமிழில் தனுசுடன் சீடன் படத்திலும் நடித்து இருந்தார். இவர் மீது கோட்டயத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார வழக்கை தொடர்ந்துள்ளார்.   அதாவது அந்த பெண்ணை படத்தில் நடிக்க வைப்பதாகவும், அந்த படத்திற்கான கதையை கேட்பதற்காக தன்னுடைய வீட்டிற்கு வருமாறு அழைத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

 இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் அந்த பெண் தனக்கு 25 லட்சம் ரூபாய் கொடுத்தால் புகாரை வாபஸ் பெறுகிறேன் என கூறியுள்ளார்,  அதனால் தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உன்னி முகுந்தன் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.

இதனால் கோர்ட்டும் வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. மேலும் அந்த பெண்ணிடம் பேசி சமரசம் செய்து கொண்டதாகவும், அதனால் வழக்கு விசாரணைக்கு தடை கோரி மீண்டும் மனுதாக்கல் செய்தார் உன்னி முகுந்தனின் வழக்கறிஞர். ஆனால் அந்த பெண் தனக்கும், உன்னி முகுந்தனுக்கும்  எந்த விதமான சமரசமும் ஏற்படவில்லை எனவும், அவர் தன்னை தொடர்ந்து அவமானப்படுத்துவதாகவும் கோர்ட்டில் கூறினார். இதை பற்றி விசாரித்த நீதிபதிகள் உன்னி முகுந்தன் அளித்த மனுவை தள்ளுபடி செய்தனர்.