கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்!

Photo of author

By CineDesk

கணவர் இறப்பில் இருந்து பழைய நிலைக்கு திரும்பும் முன்னணி நடிகை! கண்களில் தெரியும் சோகங்கள்!

நடிகை மீனாவிற்கு வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருடைய திருமணத்தில் பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த வித்யா சாகர் கடந்த ஜூன் 28-ந் தேதி திடீரென மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்தினர். கணவரை குறுகிய காலத்தில் இழந்த மீனாவுக்கு நடிகர் ரஜினிகாந்த்,விஜய்,அஜித் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். கணவர் இறந்த பிறகு சமூக வலைத்தளம் பக்கம் அதிகம் வராமல் இருந்தார். கடந்தவாரம் 90களில் முன்னணி நடிகைகளான ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோருடன் இருக்கும் புகைப்படகள் வெளிவந்துள்ளது. மீனா பதிவேடு வெளிட்ட நிலையில் இப்போது மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார் என்று ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.மேலும் நடிகை ரம்பா, நடன இயக்குனர் கலா ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றார்கள்.

அங்கு எடுத்த போட்டோக்களை பகிர்ந்து அழகிய உள்ளங்களுடன் இனிய காலை பொழுது என பதிவிட்டுள்ளார். கணவர் இறந்த பின் முதன்முறையாக வெளி உலகிற்கு வந்துள்ளார் மீனா. இருப்பினும் அவரது முகத்தில் இன்னும் கணவரை இழந்த சோகம் மறையவில்லை என்பதை போட்டோவை பார்க்கும்பொழுது தெரியவருகிறது.