நெகட்டிவ் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதா விருமன் வசூல்? முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

0
85

நெகட்டிவ் விமர்சனங்களால் பாதிக்கப்பட்டதா விருமன் வசூல்? முதல் நாள் கலெக்‌ஷன் எவ்வளவு?

விருமன் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்நிலையில் இன்று வெளியான விருமன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அரதப் பழசான கதையை எடுத்து வைத்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனாலும் படத்துக்கு  முதல்நாளில் நல்ல கூட்டம் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பல பிரபலங்களும் படத்தைப் பார்த்து பாராட்டி வந்தாலும், ரசிகர்களை பெரிய அளவில் படம் கவரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் நாளில் விருமன் திரைப்படம் 7 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் காரணமாக அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்த வசூல் மிகவும் மோசமில்லை என்று சொல்லப்படுகிறது.

நேற்று படம் ரிலீஸான நிலையில் முதல்நாள் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் நேற்று வெளியானது. அந்த காட்சியில் கார்த்தி தனது தந்தை பிரகாஷ் ராஜை அடித்த ஆர் கே சுரேஷுக்கு மோதிரம் போட்டு பாராட்டும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியின் போது கார்த்தி மற்றும் சூரி ஆகியோட் சொலவடைகளை சொல்லி பிரகாஷ் ராஜை கலாய்க்கும் விதமாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சி இப்போது சமூகவலைதளங்களில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.