பேன் இந்தியா ரிலீஸுக்கு தயாரான ‘தி லெஜண்ட்’… மலையாள வெர்ஷனின் முக்கிய அறிவிப்பு

0
212

பேன் இந்தியா ரிலீஸுக்கு தயாரான ‘தி லெஜண்ட்’… மலையாள வெர்ஷனின் முக்கிய அறிவிப்பு

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.

இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

கோவிட் தொற்றுக்கு முன்பே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட நிலையில் தாமதமாகி இந்த ஆண்டு தொடக்கத்தில் முடிவுற்றது. இதையடுத்து படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீடு பிரம்மாண்டமாக சென்னையில் நடந்தது. அதன் பின்னர் படத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யும் பணிகளை படக்குழு மேற்கொண்டது.

படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. தமிழகம் மற்றும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா தவிர்த்த அனைத்து வெளிநாடுகளின் உரிமையையும் சேர்த்து ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் படத்தின் மலையாள வெளியீட்டு உரிமையை முன்னணி நிறுவனமான மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தமிழில் வெளியாகும் அதே நாளில் மலையாளத்திலும் வெளியாக உள்ள நிலையில் தற்பொழுது மலையாள டிரைலர் நாளை மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

http://https://www.instagram.com/p/Cf4MTMvvV7O/?utm_source=ig_web_copy_link

Previous articleஎங்கேயோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏறத்தா!!என்ற வசனத்திற்கு விளக்கம் அளித்தார் திமுகவின் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி 
Next article“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா