“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

0
198

“அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான…” விராட் கோலி குறித்து கேப்டன் ரோஹித் ஷர்மா

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் இருப்பதால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இதையடுத்து இன்று ஒருநாள் போட்டி தொடங்குகிறது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

காயம் காரணமாக அவர் விளையாட முடியாமல் போகலாம் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த போட்டியில் அவர் விளையாடுவார் என்று சொல்லப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக விராட் கோலி மோசமான ஆட்டத்திறனில் இருக்கிறார். அவர் சர்வதேச போட்டிகளில் சதமடித்து சில வருடங்கள் ஆகிவிட்டன. விரைவில் அவர் மீண்டும் பழைய கோலியாக திரும்பி வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

இந்நிலையில் கோலியை அணியில் இருந்து நீக்கி இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று கருத்துகள் எழுந்துள்ளன. இதுபற்றி பேசியுள்ள கேப்டன் ரோஹித் “நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அணிக்காக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். ஒன்றிரண்டு போட்டிகள் அல்லது ஒரு தொடர் மோசமாக எல்லாருக்கும் அமையும். அவரின் தரத்தில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது.” எனக் கூறியுள்ளார்.

Previous articleபேன் இந்தியா ரிலீஸுக்கு தயாரான ‘தி லெஜண்ட்’… மலையாள வெர்ஷனின் முக்கிய அறிவிப்பு
Next articleஇலங்கைக்கு அனுப்பப்படுகிறதா இந்திய ராணுவம்? இந்திய தூதரகம் அளித்த விளக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here