‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

0
175

‘தி லெஜண்ட்’ படத்தின் அடுத்த அறிவிப்பு… வெளிநாட்டு உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தி லெஜண்ட் திரைப்படம் வரும் ஜூலை 28 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளரான சரவணன் அருள் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமாக உள்ளார்.  அவரது கடையின் விளம்பரத்தில் அவரே நடித்ததன் மூலம் பல மக்களின் கவனத்திற்கு வந்தார். அதைத் தொடர்ந்து தற்போது தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.

இந்தப் படத்தை இயக்குகின்றனர். விளம்பர பட உலகில் முன்னணியில் திகழும் இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற பல திரைப்படங்கள் உருவாகியுள்ளது.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தி லெஜண்ட் படத்தில் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்துலா நடிக்கவுள்ளார். படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் விவேக் அவர்கள் முக்கியம் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதனால் அவர் காட்சிகள் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

படத்தில் மற்றொரு முன்னணி நகைச்சுவை நடிகர் யோகிபாபு நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நடந்தது. அதையடுத்து வெளியான டிரைலரும் கவனத்தை ஈர்த்தது. படத்தில் அண்ணாச்சி சரவணன் ஒரு விஞ்ஞானியாக நடித்துள்ளார்.

படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது. தமிழகம் மற்றும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா தவிர்த்த அனைத்து வெளிநாடுகளின் உரிமையையும் சேர்த்து ap இண்டர்நேஷனல்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படக்குழு வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளது.

Previous articleமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விக்ரம்… கலந்துகொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி
Next articleசூர்யா – பாலா கூட்டணி படத்தின் தலைப்பு? … அட ரெண்டுமே சூப்பரா இருக்கே!