யார் என்ன சொன்னால் என்னா?… அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி

0
154

யார் என்ன சொன்னால் என்னா?… அடுத்த படத்துக்கு தயாரான அண்ணாச்சி

சரவணா ஸ்டோர்ஸ் கடைகளின் உரிமையாளர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்தார். பிரபல இயக்குனர் ஜேடி மற்றும் ஜெர்ரி ஆகியோர் இந்த படத்தை இயக்கினர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி கலைஞர்கள் இந்த படத்தில் பங்காற்றினர். இந்த படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி விநியோக நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்தது. அதுபோல இந்தியாவில் மேலும் 4 மொழிகளில் முன்னணி நிறுவனங்களால் ரிலீஸ் செய்யப்பட படம்  நேற்று சிறப்புக் காட்சிகளோடு தொடங்கியது. ஆனால் எதிர்பார்த்த வசூலை பெறாததால் தோல்விப் படமாக அமைந்தது.

படத்தில் சரவணனுக்கு நடிக்க தெரியவில்லை. எந்த உணர்ச்சிகளும் காட்டாமல் தேமே என இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராதாரவி கூட ‘தி லெஜண்ட் அண்ணாச்சியை கேலி செய்து இழிவுப் படுத்தும் விதமாக பேசியுள்ளார்’ இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது சரவணன் தனது அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். முன்னணி இயக்குனர் ஒருவரிடம் கடஹி கேட்டுள்ளாராம். இந்த படம் ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது. முந்தைய தோல்விப் படத்தை மறக்க செய்து வெற்றிப்படம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் இந்த படத்தை உருவாக்க அண்ணாசி ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Previous articleஹோம் கேர் நிறுவனத்திலிருந்து வந்த வாலிபர் ஈடுபட்ட திருட்டு! போலீசார் விசாரணை!
Next articleஇதுவரை தமிழ் படங்கள் வெளியாகாத மொழியில் சாய்பல்லவியின் ‘கார்கி’