காதலிக்க மறுத்த சிறுமியை 13 வயது சிறுவன் செய்த செயல் !!

Photo of author

By Parthipan K

13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் ஒருவன் ,காதலிக்க மறுத்த பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 13 வயது மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் என்பவன், சென்னையில் படித்து வந்துள்ளார். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு வந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதே பகுதியை சேர்ந்த சோழ பாண்டி கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி பிரியதர்ஷினி என்பவள், அங்கிருந்த அரசு பள்ளியில் படித்து வந்துள்ளார். இவ்விரும் சில நாட்களாக நட்புடன் பழகிவந்தனர். பின்னர், நட்பு காதலாக மாறி, அந்தச் சிறுமியிடம் சீனிவாசன் காதலை தெரிவித்தான்.

ஆனால், அந்த சிறுமி சீனிவாசனின் காதலை ஏற்க மறுத்து, தனது பெற்றோர்களிடம் சீனிவாசன் கூறியதை கூறியுள்ளார்.

இந்நிலையில் சிறுமி பிரியதர்ஷினி மதியம் வீட்டில் தனியாக இருந்த நேரத்தில், அந்த சிறுவன் சீனிவாசன் சிறுமியிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.இதனால், அச்சமடைந்த அந்தச் சிறுமி கூச்சலிட்ட பொழுது, தன் கையை வைத்து கத்தரிக்கோலால் பிரியதர்ஷினியின் கழுத்தை குத்திவிட்டு சிறுவன் தப்பி சென்றுவிட்டான்.

இதனால் ,சம்பவ இடத்திலேயே அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும், அந்த சிறுவனை ஊரின் ஒதுக்குப் புறத்தில் உள்ள ஒரு இடத்தில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலிக்க ஏற்ற மறுத்த சிறுமியை , மாற்றுத்திறனாளி சிறுவன் சீனிவாசன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.