பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

0
190

பிட் பேப்பரை லவ் லெட்டர் என நினைத்த சிறுமி! சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

பீகார் மாநிலம் போஜ்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் தயா குமார்.இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகின்றார்.தற்போது தான் அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகின்றது.தயா குமாரின் சகோதரி அதே பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார்.இந்நிலையில் கடந்த வாரம் அவரது சகோதரி அரையாண்டு தேர்வு எழுத சென்றார்.

அப்போது அவருடைய சகோதரிக்கு பிட் பேப்பர் வழங்கி  உதவ தயா குமார் பள்ளிக்கு சென்றுள்ளார்.அப்போது தேர்வு அறைக்கு வெளியே இருந்து குமார்  பிட் பேப்பரை தூக்கி வீசி சகோதரிக்கு உதவி செய்துள்ளார்.அப்போது தவறுதலாக ஒரு பிட் பேப்பர் மட்டும் வேறு ஒரு மாணவியிடம் சென்று விழுந்தது.அப்போது அந்த மாணவி தயா குமார் லவ் லெட்டர் கொடுத்துள்ளதாக தவறாக புரிந்து கொண்ட  அதே பள்ளியில் படிக்கும் அவருடைய சகோதரரிடம் இதுகுறித்து கூறியுள்ளார்.

அப்போது அவருடைய சகோதரர் நண்பர்களுடன் சேர்ந்து தயா குமாரை தூக்கி சென்று சரமாரியாக அடிக்கத் தொடங்கினார்.அப்போது அந்த சிறுவன் இறந்துள்ளான்.அந்த கும்பல் சிறுவனின் உடலை சிதைத்து ரயில்வே டிராக் பக்கம் வீசி சென்றுள்ளனர்.வெகு நேரம் ஆகியும் தாய குமார் வீடு திரும்பவில்லை அதனால் சந்தேகம் அடைந்த அவருடைய பெற்றோர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் தாய குமாரை தேடி வந்தனர்.அதனையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு அந்த சிறுவனின் உடல் பாகங்கள் போலீசார் கைப்பற்றினர்.அதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த கும்பல் கொன்று தண்டவாளத்தில் தூக்கி வீசியது தெரியவந்தது.மேலும் குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் சிறார் என்பதால் சிறார் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleவில்லனாக எப்ப நடிக்க போறீங்க… ரசிகர்களின் கேள்விக்கு மழுப்பலான பதில் சொன்ன சிவகார்த்திகேயன்!
Next articleஒரே நாளில் தலைகீழாக மாறிய இங்கிலாந்து அரசியல் விவகாரம்! லிஸ் ட்ரஸ் ராஜினாமாவின் ரகசியம் என்ன?