திருக்குறள் உண்மை உரையும், வரலாற்று ஆதாரங்களும், என்ற தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் என்பவர் எழுதிய புத்தகம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதனை பெற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திருவள்ளுவர் ஞானஸ்தானம் பெற்றவர் அவர் கிறிஸ்தவராக இருந்து தான் திருக்குறள் எழுதியதாக நூலாசிரியர் பெரியநாயகம் தன்னுடைய நூலில் குறிப்பிட்டு உள்ளார். இது ஆய்வுக்கு உரியது தான் என்று உரையாற்றினார் இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம் சுமத்தி வருகிறார்கள். இதனை ஒரு சிலர் திட்டமிட்டு செய்ததற்கு காரணம் அமைச்சர் தங்கம்தென்னரசு என்று ஒரு தகவலும் வெளியாகி இருக்கிறது. இதில் தங்கம்தென்னரசு எங்கே இருந்து வந்தார் என கேட்டால், ஆலயங்களில் தேவாரம் திருவாசகம் படிப்பதுபோல திருக்குறளையும் படித்து செய்வதற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கும் தங்கம்தென்னரசு கருத்து தெரிவித்திருந்தார். இப்படி இந்து கோவில்களில் திருக்குறளை படிக்க வைத்து விட்டால் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை பிராமணராக்க முயற்சி செய்வார்கள் அதனை அடிப்படையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று முடிவு செய்துதான் பெரிய நாயகத்தை வைத்து திருவள்ளுவரை கிறிஸ்துவராக உருவகப்படுத்த திடீரென்று துவக்கி இருக்கிறார்களாம் ஒரு சிலர்.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் ஒருவழியாக தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு 8 புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள், அதில் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் டாக்டர் சரவணன் மதுரை மாநகர மாவட்ட தலைவர் பதவியில் அமர்த்தப் பெற்றிருக்கிறார். கரூர் மாவட்ட அதிமுக நிர்வாகியாக இருந்து பாஜகவில் இணைந்த செந்தில்நாதன் கரூர் மாவட்ட தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டு இருக்கின்ற சங்கீதா பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் மாவட்ட தலைவர் என்று சொல்லப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் உட்பட மற்ற ஐந்து மாவட்ட தலைவர்களும் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். முன்னாள் மாவட்ட தலைவர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்க அவர்களை புதிய மாவட்ட தலைவர்கள் அரவணைத்து செல்ல வேண்டும், அவர்களுடன் ஒன்றாக இணைந்து பணிபுரிய வேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. கோஷ்டி பூசலை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே தடுப்பது நல்ல விஷயம் தான் என சொல்கிறது அந்த கட்சியின் வட்டாரம்.