கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் பேசியது அக்கட்சியின் தொண்டர்களை கண்கலங்க செய்திருக்கிறது.
நிகழ்ச்சி மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேசி இருப்பதாவது :-
இப்பொழுதெல்லாம் நான் எங்கு சென்றாலும் உன்னைத்தினம் தேடும் தலைவன் அப்படிங்கிற பாடலைப் பாடுவதும், அதேபோல, ‘என்னாசை மச்சான்’ படத்தில் ‘ஆடியில சேதி சொல்லி பாடலை’ கேட்கும்பொழுது என் விழிகளில் இருந்து நீர் வந்து விடுகின்றன. ஏனெனில், நான் அந்தப் பாடலைக் கேட்கும்போது என்னுடைய கல்லூரி பருவத்திற்குப் போய்டுவேன். ‘உன்னைத் தினம் தேடும் தலைவன்’அப்படிங்கிற பாடல், நான் ஒரு காலேஜ் ஸ்டூடண்ட் ஆக இருந்தபோது, கேப்டனுடைய திரைப்படத்தை என்னுடைய தகப்பனார் வேலை செய்த மூங்கில்துறைப்பட்டு என்னும் ஊரில், அந்தக் கிராமப் பின்னணியில், அந்த கிராம மக்களோடு நான் அந்தப் பாடலைப் பார்த்த அந்த நொடியே, கேப்டனின் உடைய மிகப்பெரிய ரசிகையாக மாறிவிட்டேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் , என் மனதை மிகவும் கவர்ந்த படமாக இருந்தது, உழவர் மகன். அதை எங்கள் அன்பு சகோதரர் அண்ணன் இப்ராகிம் ராவுத்தருடைய முதல் தயாரிப்பில், ஐ.வி. சினி கிரியேசன்ஸில் திரைப்படம் உருவாகி, பட்டித்தொட்டியெங்கும் இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக ‘உழவர் மகன்’ அமைந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
நான் அவருக்கு ரசிகையாக இருந்த தருணத்தில் கடவுள் அவரையே எனக்கு கணவனாக கொடுத்துவிட்டார். யார் ஒருவரை திரையில் கண்டு ரசித்தேனோ அவரை என் கணவனாக ஏற்றுக் கொண்ட பொழுதை என் உயிர் உள்ளவரை என்னால் மறக்க முடியாது என்று கண்களால் நீர் வழிய தெரிவித்திருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்.
தலைவருடைய பாடல்கள் அத்தனையுமே மிகப்பெரிய வெற்றிப் பாடல்கள் தான். என்னை மிகவும் கவர்ந்த கேப்டனின் பல பாடல்களில் சிலவற்றைப் பாடி, நாம் கேப்டனுக்கு நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறோம்.எனவே, இங்கு பாடிய அனைவருமே மிகச்சிறந்த அளவில் பாடலைப் பாடியிருக்கீங்க. இந்த முயற்சியை எடுத்து நீங்கள் உங்கள் சாதனையை நிரூபிச்சிருக்கீங்க. இன்னும் மேலும் மேலும் உங்களது புகழ், தமிழகம் முழுவதுமே கவிதா இன்னிசை மழையின் இசைக்கச்சேரி நடக்கட்டும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அவர் தன்னுடைய உரையை முடித்தார்.
இவ்வாறு விஜயகாந்த அவர்களின் மீது தான் கொண்ட காதலினை அனைவர் முன்னிலையிலும் வெளிப்படுத்திய தேமுதிக தொண்டரவர்களுக்கும் விஜயகாந்தினுடைய ஞாபகம் வந்து அவர்களின் கண்களிலும் நீர்வழிந்து இருக்கிறது.